இலங்கை மக்களுக்கு இயன்றளவு ஆதரவையும் உதவியையும் வழங்க தயார் – சீன ஜனாதிபதி இலங்கையின் அரச தலைவரிடம் தெரிவிப்பு!

இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பை முன்னெடுத்துச் செல்லும் என்று சீன ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
அரசியல் ரீதியான பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தி, நேர்மையான உதவி மற்றும் நிரந்தர நட்புறவை முன்கொண்டு செல்லவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை ஜனாதிபதியின் தலைமையின் கீழ், நாடு தற்காலிக சிரமங்களை சமாளித்து, சமூக மீட்சிக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இலங்கை மக்களுக்கு தன்னால் இயன்றளவு ஆதரவையும் உதவியையும் வழங்க தயாராக இருப்பதாகவும் சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று!
ஜப்பான் பயணமானார் பொலிஸ்மா அதிபர்!
நியாயமான முறையில் பொதுத் தேர்தல்களை நடத்துங்கள் - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்து!
|
|