இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம்!

வெள்ளம் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு இரண்டு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி முதல் இவ்வாறு நாள்தோறும் இரண்டு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாட்டு முகாமையாளர் பீ.எச்.ஆர்.டீ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கலாவனை, கொடகவல, இரத்தினபுரி போன்ற டிப்போக்களில் அதிகளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.காலி, மாத்தறை, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் டிப்போக்களின் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் மாவட்ட முதியோர் பேரவை அலுவலகம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா விசேட கவனம்!
நீதியரசர் விக்னேஸ்வரனின் இயலாமையாலே கிடைத்த சந்தர்ப்பம் தவறவிடப்பட்டது – சுவிஸ் தூதுவருடனான சந்திப்ப...
உலக நலனுக்காக உணவுக் கட்டமைப்பை நிலையானதாக மாற்ற வேண்டும் – ஐநாவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறு...
|
|