இலங்கை போக்குவரத்து சபைக்கு 40 மில்லியனுக்கும் அதிக வருமனம்

Tuesday, May 2nd, 2017

தொழிலாளர் தினத்திற்கு பேருந்துகளை வழங்கியதன்  மூலம் 40 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது,

4,000 பேருந்துகளை கட்டணம் அறவிடப்பட்டு பத்து அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் 7000 பேருந்துகளை  பெற்றுக் கொள்வதற்கு விண்ண்ப்பித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பங்களுக்கு அமைய பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாவிடின் பஸ்கள் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மே தினத்தை முன்னிட்டு இரண்டு ரயில்கள் அரசியல் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசேட ரயில் சேவை மூலம் சுமார் 700,000 ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே. இதிபாலகே சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: