இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து – சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக் அறிவிப்பு!
Saturday, February 6th, 2021
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கிங்ஸ்லி ரணவக்க மேலும் கூறுகையில் –
தனியார் பேருந்து துறையினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..
அதற்கமைய , இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் நாளாந்த பணிகளுக்கு அவசியமான அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மறு அறிவித்தல்வரை இந்த அறிவித்தல் அமுலில் இருக்கும் எனவும், எதிர்வரும் 8 ஆம் திகதி தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபையிடம் உள்ள அனைத்து பேருந்துகளும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் எனவும் கிங்ஸ்லி ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


