இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிய பேருந்துகள் கொள்வனவு!

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 325 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தை மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக மாற்றியமைக்கும் நோக்கில் இவ்வாறு புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
அதன் பிரகாரம் பின்புறம் உயரத்தை கொண்ட 50 ஆசனங்களைக் கொண்ட 272 பேருந்துகளைகளை கொள்வனவு செய்வதற்கும், 33 ஆசனங்களைக் கொண்ட 53 அதி சொகுசு பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபார்சுக்கமைய 5 வருடத்தில் மீள் செலுத்தக்கூடிய ஒத்தி வைக்கப்பட்ட வரி அடிப்படையில் மேற்படி 325 பேருந்துகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
Related posts:
பால்மாவின் விலை அதிகரிப்பு !
எம்.பிக்கள், அமைச்சர்கள் அல்லாத நபர்களின் பாதுகாப்புக்காக 5400 பொலிஸ் அதிகாரிகள் - பொதுமக்கள் பாதுகா...
கஜகஸ்தானுகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு !
|
|