இலங்கை பேரவலத்தில் 13 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் பலி!
Thursday, April 25th, 2019
இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 13 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தொடர் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
பங்களாதேஷ், சீனா, இந்தியா, டென்மார்க், ஜப்பான், நெதர்லாந்து, போர்த்துக்கல், சவுதி அரேபியா, ஸ்பெயின், துருக்கி, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.
இந்த தகவலுக்கமைய 11 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 6 பிரித்தானியர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் தரவுகளுக்கமைய 39 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளளது.
Related posts:
|
|
|


