இலங்கை தொடர்பில் ஐ.நா உறுதி – அன்ரனியோ குரெரெஸ்!
Friday, April 19th, 2019
இலங்கை மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் சென்றுள்ள இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இதன்போதே அவர், இலங்கைக்கு உதவ தொடர்ந்தும் உறுதி பூண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியான முனையில் தீர்க்கப்பட்டமை குறித்தும் இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா பொதுச்செயலர் திருப்தி வெளியிட்டார்
Related posts:
நீர் உயிரின உற்பத்திக்கு சீனா விருப்பம்!
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக 5000 பேர் இணைப்பு!
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சகல அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும் - மத்திய வங்கியின் முன்னாள...
|
|
|


