இலங்கை தூதுவர் மீதான தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புபடவில்லை – மலேஷியா!

Wednesday, September 7th, 2016

மலேஷியத் தலைநகர் கோலம்பூரில் இலங்கை தாதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், தனிப்பட்ட ஒரு சம்பவம் என மலேஷியா தெரிவித்துள்ளது.

பயங்கரவாத நோக்கத்துடன் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என மலேஷிய பிரதி உள்விவகார அமைச்சர் தாக்கூர் ஜஸ்லான் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்வர் மீதான தாக்குதலை, அமைச்சு அதிக அக்கறையுடன் அணுகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த தாக்குதலுடன் தொடர்புட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலமர்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது தாக்கூர் ஜஸ்லான் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை தூதுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வருத்தம் தெரிவித்து மலேஷிய வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து, குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவதாக வெளிவிவகார அமைச்சு உறுதி அளித்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை கருத்தில் கொண்டு கோலம்பூரில் உள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்துடன் நெருக்கிப் பணியாற்றி வருவதாக மலேஷிய வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

download

Related posts: