இலங்கை தூதுவரை தாக்கியோருக்கு விளக்கமறியல்!

Wednesday, September 7th, 2016

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய ஐந்து பேரையும் விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஐந்து பேரும் நேற்று (06)கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்களை இக்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சோலாங்கூர் பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றம் 26 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த தாக்குதல் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

01_06092016_kaa_cmy

Related posts: