இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பொதுமக்கள் விசாரணைப் பிரிவு – ஆரம்பித்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய!
Friday, August 9th, 2024
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பொது முறைப்பாடுகளைப் பெற்று விசாரணை செய்வதற்கான உள்விவகாரப் பிரிவு, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் திறந்து வைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கும் சுங்கத்துக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமென அமைச்சர் குறிப்பிட்டார். கொடுக்கப்பட்ட வருவாய் இலக்குகளுக்கு அப்பால் சென்ற சுங்கத் திணைக்களம் நாட்டுக்கு தனித்துவமான பணியை செய்து வருவதாகவும் இதன் காரணமாக பல்வேறு பாராட்டுக்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
எனவே, இப்பிரிவு பொதுமக்களுக்கும் திணைக்களத்துக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துமென சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்காலத்தில் உள்ளுர் வருவாய் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பத்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நகர அபிவிருத்திக்காக 1500 கோடி!
விரைவில் தமிழ் சிறைக்கைதிகள் விடுதலை - ஜனாதிபதி நடவடிக்கை!
யாழ் மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியிடப்படும் – மாவட்ட...
|
|
|


