இலங்கை – கென்யா இருதரப்பு உறவுகளில் புதிய உத்வேகத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எதிர்பார்ப்பு!
Tuesday, October 12th, 2021
ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் திறனைத் திறக்கவும், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை ஈர்ப்பதற்கும் நேரடி விமான இணைப்பு மிக முக்கியமானது என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கென்யாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியின் முதல் நாளில், கென்யாவின் சுற்றுலா மற்றும் வனவிலங்கு அமைச்சர் நஜிப் பலாலாவுடன் இணைந்து, நைரோபியில் உள்ள இலங்கை விமான நிறுவனத்தின் பயணிகள் சேவை முகவர் அலுவலகத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக உயர்ஸ்தானிகர் கனநாதன் முன்னெடுக்கும் முயற்சிகளை, இந்த விமான இணைப்பு மற்றும் நைரோபியில் உள்ள ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் பயணிகள் சேவை முகவர் அலுவலகம் ஆகியன எளிதாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் கென்யாவின் விளையாட்டு, பாரம்பரிய மற்றும் கலாச்சார அமைச்சர் கலாநிதி. அமினா முஹம்மத்தை விளையாட்டுக்கள், பாரம்பரிய மற்றும் கலாச்சார அமைச்சில் வைத்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சந்தித்தார்.
இரு நாடுகளிலும் விளையாட்டுகளை வளர்ப்பதற்கான கொள்கைகள் மற்றும் உத்திகள் குறித்து அமைச்சர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்குவதற்கான இருதரப்பு நெறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்தனர்.
மேலும் கென்யாவின் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் ஜோசப் வக்காபாவை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சந்தித்தார். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பொருளாதார செழிப்புக்களை அடைந்து கொள்வதற்காக, அந்த நாடுகளின் தேவைகள் குறித்த விரிவான கலந்துரையாடலில் அமைச்சர்கள் ஈடுபட்டனர். செயன்முறைகளை தானியக்க ரீதியான மாற்றி, செயற்றிறனை அதிகரிப்பதற்காக, அரச சேவையில் டிஜிட்டல் ஒற்றைச் சாளர அமைப்பை உருவாக்குவது குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடினர்.
இது சம்பந்தமாக, அறிவு மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் இணைவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
இதேவேளை விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை மரியாதை நிமித்தமான சந்தித்த நைரோபியை அடிப்படையாகக் கொண்ட அவுஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தானின் உயர்ஸ்தானிகர்களும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பிரதி உயர்ஸ்தானிகர்களும் அவர்களது நாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு ஈடுபாடுகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டிருந்தனர்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலயங்களுக்கான இராஜாங்க அமைச்சர் உயர்ஸ்தானிகர் கனநாதனுடன் இணைந்து, நைரோபியில் இலங்கை சமூகத்தின் முன்னிலையில் சுருக்கமான மத நலன்களுக்காக கென்யாவில் ஒரு பொது இடத்தில் நிறுவப்பட்ட முதலாவது புத்தர் சிலையைப் பார்வையிட்டனர். உயர்ஸ்தானிகர் கனநாதனால் இந்த சிலை 2021 ஆகஸ்ட் மாதத்தில் நிறுவப்பட்டது. அமைச்சர்கள் உயர்ஸ்தானிகராலயத்துக்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|
|


