இலங்கை கடலில் இந்திய கப்பல் ஆய்வு !

Monday, March 27th, 2017

இந்திய கடற்படையின் கப்பல் ஒன்று இலங்கை கடற்படையினருடன் இணைந்து ஆய்வுகளை நடத்தவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ளது.

இதன்போது இரண்டு தரப்பும் இணைந்து புதிய கடல்பிராந்திய பாதுகாப்பு குறித்த தரவுகளை பெறவுள்ளன. இலங்கைக்கு வரும் கப்பல்களை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவின் ஐஎன்எஸ் டார்சாக் என்ற கப்பல் இந்த பணிகளில் ஈடுபடவுள்ளதுடன், இந்த ஆய்வின்போது இலங்கையின் கடற்படையினருக்கு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.இந்த ஆய்வுகளின் போது இந்திய கப்பல் காலிக்கும் கொழும்புக்கும் செல்லவுள்ளது.

Related posts: