இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில், நேற்றிரவு 2 படகுகளுடன் குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை தலைமன்னாருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீனவர்களின் கைதினை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்திருந்த இராமேஸ்வரம் மீனவர்கள், நேற்றுமுதல் மீள மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட 12 பேரும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் என இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடதத்தக்கது..
00
Related posts:
சிகரட் விற்பனையை நிறுத்திய வர்த்தக நிலையங்கள்.!
வேள்விக்கான தடை: கவுணாவத்தை ஆலயம் மேன்முறையீட்டு நீதிமன்று செல்கிறது!
ஆகஸ்ட் 3 இல் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|