இலங்கை கடற்படைவீரரின் உயிரிழப்பு விவகாரம் – இந்திய இராஜதந்திரி இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டதாக இந்திய ஊடகம் தகவல்!
Monday, July 1st, 2024
எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது இலங்கை கடற்படை வீரர் உயிரிழக்க நேரிட்டமை குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகாராலய இராஜதந்திரி ஒருவரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
தொடர்ச்சியான சட்டவிரோதமான கடற்றொழில் நடவடிக்கைகள் குறித்து இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோதமான கடற்றொழில் நடவடிக்கைள் குறித்தும் இழுவைமடி படகுகள் குறித்தும் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் இந்திய இராஜாதந்திரியிடம் கையளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்திய இராஜதந்திரி இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும். இலங்கையின் கரிசனையை வெளியிடுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டள்ளது.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு இந்த விடயத்தை இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் கொண்டுவந்துள்ளார்.
000
Related posts:
|
|
|


