இலங்கை கடற்படையின் கடந்த வருட வருமானம் 226 கோடி !
Wednesday, January 4th, 2017
2016ஆம் ஆண்டில் கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் மூலம் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இதற்காக 2016ஆம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில் 6371 நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை கூறியுள்ளது.
எவன்கார்ட் தனியார் நிறுவனத்திடம் இருந்த கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடற்படைக்கு வழங்கப்பட்டது.அதன்படி இந்நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படை இதுவரை ஈட்டியுள்ள வருமானம் 263 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்கு 7457 கப்பல் பருவ நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.
கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பெறப்பட்ட வருமானம் அரசின் ஒன்றிணைந்த நிதியத்திற்கு நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.

Related posts:
போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு சென்றார் ஜனாதிபதி!
சுவிஸில் புகலிடம் கேட்ட 377 இலங்கைத் தமிழர்கள்!
இந்திய நிதி அமைச்சர் - இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு - கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை வழ...
|
|
|


