இலங்கை – ஐக்கிய அரபு இராச்சியம் இடையே உத்தேசிக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை, விரைவில் இறுதி செய்ய இணக்கம் – அமைச்சர் தினேஸ் குணவர்த்தன!
Friday, June 4th, 2021
இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில், விமான சேவைகளை விரிவுபடுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் அஹமத் அலி அல் சயீக் இற்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பில், இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரியும், இலங்கைத் தொழிலாளர்களை பாதுகாத்து, நலன்புரி உதவிகளை வழங்கி வருகின்றமைக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் அல் சயீக் இற்கு வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக, இரு நாடுகளுக்கு இடையேயான உத்தேசிக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை, விரைவில் இறுதி செய்ய முடியும் எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


