இலங்கை உட்பட 5 நாடுகளுக்கு பயணத்தடை!
Saturday, April 24th, 2021
இலங்கை உட்பட மேலும் சில நாடுகளுக்கு சவுதி அரேபியா பயணத்தடை விதித்துள்ளதாக சவுதி அரேபிய விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது குறித்து சவுதி அரேபிய விமானப் போக்குவரத்து அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஏனைய நாடுகளுக்கு பயணித்துள்ள சவுதி அரேபிய பிரஜைகள் மீண்டு நாடு திரும்புவதற்கு 72 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக முன்னதாக கனடா, ஓமான், பிரித்தானியா ஆகிய நாடுகள் ஆசிய நாடுகள் சிலவற்றுக்கு பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
80 ரூபாவுக்கு வெங்காயத்தை கொள்வனவு செய்ய தயார்: சதொச நிறுவனம்!
கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தால் மூழ்கியதை பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
இறக்குமதி உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி ரூ. 50 ஆக அதிகரிப்பு!
|
|
|


