இலங்கை – இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு – இருதரப்பு பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்து தொடர்பில் விரிவாக ஆராய்வு!
Saturday, September 25th, 2021
இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும் இடையில் நியூயோர்க்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் இடம்பெறும் குற்றங்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு மற்றும் தகவல் பரிமாற்றங்கள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


