இலங்கை – அவுஸ்திரேலியா இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
Sunday, March 17th, 2019
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒரு வார காலத்திற்குள் இடம்பெறும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதன் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கை வரவுள்ளன.
கம்பெரா மற்றம் நியூகாசெல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மேலும் இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வரவுள்ளன.
அவுஸ்திரேலியாவின் சுமார் 10 ஆயிரம் முப்படை வீரர்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளவுள்ளனர்.
அவர்கள் இலங்கையில் முப்படையினருடன், மனிதநேய சேவைகள், அனர்த்தமுகாமைத் சேவைகள், கடல்வள பாதுகாப்பு, அமைதி காக்கும் வேலைத் திட்டங்கள் பலவற்றில் ஈடுபடவுள்ளனர்.
Related posts:
பெல்ஜிய துணைப் பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்குமிடையில் சந்திப்பு!
4 வாள்கள் ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது!
இலங்கையில் MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய நடவடிக்கை - இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!
|
|
|


