இலங்கை – அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக ஒப்பந்த காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, October 11th, 2023

இலங்கை, அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக ஒப்பந்த காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியா இலங்கையின் முக்கியமான நேரடி வெளிநாட்டு முதலீட்டு தரப்பாக இருப்பதுடன், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகைதரும் 05 ஆவது நாடாகவும் உள்ளது.

இருநாடுகளுக்கிடையில் இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் 2017.11.02 அன்று இலங்கை அவுஸ்திரேலியா வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கு இயலுமாகும் வகையில் இன்று முதல் எதிர்வரும் ஐந்து (05) ஆண்டுகளுக்காக குறித்த ஒப்பந்தத்தை நீடிப்பதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

000

Related posts: