இலங்கை அரசியல் நெருக்கடிக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணுங்கள் – பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வலியுறுத்து!
Saturday, July 16th, 2022
இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் ஜனநாயக முறையில் மக்களின் அபிலாஷைகளை பாதுகாக்குமாறு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பது முக்கியமானது. அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்கும், அனைத்து மக்களின் தேவைகளுக்கும் சேவை செய்வதற்கும் அனைத்துக் கட்சிகளும் விரைவாக ஒன்றிணைந்து செயல்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
முன்னாள் பிரதமர் வைத்தியசாலையில் !
ஊரடங்கு சட்டத்தை மீறிய 21 பேருக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் கொடுத்த தண்டனை!
2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அத...
|
|
|


