இலங்கை – அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் – 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க அரச அதிபர் ஜோ பைடன் இலங்கை மக்களுக்கு வாழ்த்து!
Saturday, February 4th, 2023
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கை மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியில் அமெரிக்க ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்டினால் ஜனாதிபதியிடம் இந்த வாழ்த்துச் செய்தி கையளிக்கப்பட்டது
காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவது, மனிதக் கடத்தலைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பானதும், சுதந்திரமானதுமான திறந்த இந்து-பசுபிக் பிராந்தியத்தை பேணுவது உள்ளிட்ட விடயங்களில் வரலாறு முழுவதும் உலகளாவிய பாரிய சவால்களை இரு நாடுகளும் எதிர்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி தமது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


