இலங்கையை இலக்கு வைத்து சைலன்ஸ் குழு இணையக்கொள்ளை!

Friday, July 5th, 2019

இணையக்கொள்ளையில் பயிற்றப்பட்ட சைலன்ஸ் என அடையாளப்படுத்தப்பட்ட குழு ஒன்று வங்கிகள் மீது இணையத்தாக்குதல்களை நடத்தி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவை தலைமையகமாகக் கொண்ட குரூப்-ஐபி என்ற நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த குழு முறையே பங்களாதேஷ், இந்தியா, இலங்கை மற்றும் கிர்கிஸ்தானில் ஆகிய நான்கு நாடுகளை இலக்கு வைத்து செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பங்களாதேஷில் உள்ள டச் பங்க்ளா வங்கியின் மீது இணையத்தாக்குதல் நடத்தியதில் மூன்று மில்லியன் டொலர்கள் வரை நட்டமேற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த குழுவினர், ரஷ்யா, முன்னாள் சோவியத் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வங்கிகளை குறிவைத்து செயற்பட்டிருந்தன. தற்போது ஆசிய நாடுகள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக குரூப்-ஐபி நிறுவனம் கூறியுள்ளது.

இதேவேளை, இந்த சைலன்ஸ் ழுவினர் இந்தியா, இலங்கை மற்றும் கஸ்கஸ்தானில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எனினும் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களின் பெயர்களை வெளியிடமுடியாது என்றும் குரூப் ஐபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts: