இலங்கையில் 90 வீதமான பவளப் பாறைகள் அழிந்து விட்டன – கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர்!

Monday, June 24th, 2019

இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள 90 வீதமான பவளப் பாறைகள் இப்போது அழிந்து விட்டதாக, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரேனி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

“காலநிலை மாற்றம், மாசுபாடு, சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் கடலுக்குள் வீசப்படும் பொலித்தீன் அளவு ஆகியவற்றினால் இலங்கைத் தீவின் பவளப் பாறைகள் அழிவடையும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை ஆராய்ச்சி நிரூபித்துள்ளன.

அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒவ்வொருவரும் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்காவிட்டால், அடுத்த பத்தாண்டுகளில் பவளப்பாறைகள் முற்றாக அழிந்து விடும் அச்சுறுத்தலை உள்ளது.

உலகில் வேறு எங்கும் காணப்படாத- அழகான பவளப் பாறைகள் இன்னும் நாடு முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் காணப்படுகின்றன.

அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் 10 ஆண்டுகளில் வண்ணமயமான பவளப் பாறைகளை பார்க்கின்ற வாய்ப்பை இலங்கையர்கள் இழக்க நேரிடும்.

தற்போதைய அழிவு நிலையத் தடுக்க நடவடிக்கை எடுப்பதில் அரசு சாரா நிறுவனங்கள், சிவில் சமூகம் மற்றும் பொது மக்கள் கைகோர்க்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: