இலங்கையில் 2 ஆயிரத்து 773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!
Thursday, September 8th, 2022
இலங்கையில் 2 ஆயிரத்து 773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, 06 மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 773 இடங்கள் டெங்கு நுளம்புகள் பெருகும் அதிக ஆபத்துள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கையில் அதிக ஆபத்துள்ள 06 மாவட்டங்களில் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை 75 ஆயிரத்து 993 வளாகங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 20,704 வளாகங்கள் நுளம்புகள் பெருகிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
தப்பியது எடப்பாடி அரசு : 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி ...
யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது!
சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது முகக்கவசம் கட்டாயமில்லை – பொலிஸார் அறிவிப்பு!
|
|
|


