இலங்கையில் மோசமான சூழல் இல்லை – சுற்றுலாப் பயணிகள் முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை – ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம் தெரிவிப்பு!

ஊடகங்கள் காட்டுவது போல் இலங்கையில் மோசமான சூழல் இல்லை என்பதால் உலகின் தற்போதைய நிலைவரப்படி முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை என்று ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம் (ACMA) தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் நேற்ற வியாழக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அந்தச் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுற்றுலாத்துறையை விரைவாக மீட்டெடுப்பதற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையிலிருந்து விடுபட இலங்கைக்கு உடனடியாக நிதி மறுசீரமைப்பு வசதிகளை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு பிரதமர் தினேஸ் குணவர்த்தன தனது நன்றியைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முச்சக்கரவண்டிகள் அதிகரித்துவிட்டது - அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா!
அலுவலகங்களில் கைவிரல் அடையாள பதிவு - கட்டாயமாக்கப்படவுள்ளது!
சிறப்பாக நடைபெற்ற வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு !
|
|