இலங்கையில் புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த நனோ தொழில்நுட்ப நிறுவனம் தயார் – நனோ தொழில்நுட்ப நிறுவனம்!
Friday, December 17th, 2021
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் பெறுமதியை அதிகரிக்கும் வகையில் பொஸ்பேட், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கிய புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனம் முன்வந்துள்ளது.
பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதற்கட்ட நடைமுறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொஸ்பேட் உரங்களின் மதிப்பை கூட்டி தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய உரக் கலவையைப் பயன்படுத்தியதனூடாக சோளப்பயிர்ச் செய்கை வெற்றியடைந்துள்ளதாக பேராசிரியை நிர்மலா கோட்டேகொட இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார். இந்த புதிய வகை உரத்தைப் பயன்படுத்தி மரக்கறிகள் மற்றும் பிற பயிர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது வெற்றி அடைந்தால், இயற்கை விவசாயத்திற்குத் தேவையான அனைத்து கூறுகளையும் கொண்ட உயர்தர உரங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


