இலங்கையில் புதிய இன நுளம்புகள் பேசாலையில் கண்டுபிடிப்பு!

Tuesday, January 31st, 2017

உலக சுகாதார ஸ்தாபனம் மலேரியாவை அடியோடு ஒழித்துவிட்டதாகக் கூறப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் இணைத்துக் கொண்டுள்ள அதே சமயத்தில் புதிய இன நுளம்புகளை இனங்கண்டுள்ளதாக டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த ரக நுளம்பு மனனார் பேசாலை பகுதியில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மலேரியாவைப் பரப்பும் பிரதான காவியாக இந்த நுளம்பு இருந்து வருவதாகவும், ஆரம்பத்தில் இது வட இந்தியாவிலேயே முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

பின்பு குறுகிய காலத்தில் இந்த இன நுளம்புகள் தென் இந்தியாவுக்கு பரவியுள்ளன என்றும்  இலங்கையின் மற்றைய பிராந்திய ங்களுக்கும் இது பரவியிருக்கும் வாய்ப்புகள் உள்ளனவென்றும் சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றார்கள். இந்த இன நுளம்பு களின் முட்டைகள் பேசாலையிலிருந்து கொழும்புக்கு எடுத்துவரப்பட்டு ஆய்வுகூடத்தில் பரிசீலனை செய்யப்பட்டன. இந்திய விஞ்ஞானிகள் உட்பட பலர் கூடி ஆய்வு செய்ததில் இந்தப் புதிய இன நுளம்பு பற்றி அறிய முடிந்துள்ளது. இந்தக் கண்டு பிடிப்பை அடுத்து நாடு முழுவதும் இந்த நுளம்பு பற்றிய பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் ஹேரத் மேலும் தெரிவித்தார்.

12

Related posts:

கழிவுப் பொருட்களை அகற்றுவது தொடர்பில் நெருக்கடிகள் ஏற்படுமாயின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ...
யாழ்ப்பாண பல்கலையில் புதிய துறையாக மனித உயிரியல் விஞ்ஞானத்துறை - மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம்!
இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய் - சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் பிரிவு அதிர்ச்சித் தகவல்!