இலங்கையில் புகையிலை, மதுவினால் வருடாந்தம் 40,000 பேர் இறப்பு!

Friday, September 16th, 2022

சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் எனவும், இதன் மூலம் 35,000 பெண்கள் கணவனை இழந்துள்ளதாகவும், சுமார் 700,000 பிள்ளைகள் தந்தையை இழந்துள்ளதாகவும் மகா சபையின் தேசிய அமைப்பாளர் ரூபன் விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் சுமார் நாற்பதாயிரம் பேரின் இழப்பினை ஈடு செய்யும் வகையில், வருடாந்தம் புதிதாக 50,000 பேர் சிகரெட் மற்றும் மதுபானத்தைப் பயன்படுத்துகின்றனர், அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையை தவிர்ப்பது தொடர்பான தேசிய கொள்கைக்காக பாடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: