இலங்கையில் நீண்ட கால முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் மேலும் 24.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கும் அமெரிக்கா !

Saturday, August 10th, 2024

இலங்கையில் நீண்ட கால முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் மேலும் 24.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

நிதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய யு.எஸ்.எய்ட் அமைப்பின் ஆசியப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி நிர்வாகி மைக்கல் ஷிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது யு.எஸ்.எய்ட் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான திட்டத்தின் பணிப்பாளர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்டோரும் பங்கேற்றதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதியினூடாக இலங்கையின் சந்தை சார்ந்த அபிவிருத்தியினை வலுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இலங்கையர்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டு முயற்சிகளுக்கும் இந்த நிதி ஆதரவளிக்கும் என யு.எஸ்.எய்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

000

Related posts: