இலங்கையில் நாளாந்தம் 5 ஆயிரம் மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!

Thursday, September 30th, 2021

நாட்டில் நாளொன்றில் 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கழிவாக வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உணவுக் கழிவுகள் மற்றும் உணவு மாசடைவதைக் குறைப்பதற்கான சர்வதேச விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து  தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் – உலகில் மனித தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பகுதி வீணாகுவதாக சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறாக வருடத்திற்கு 1.3 பில்லியன் தொன் உணவு வீணடிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் 40 சதவீதம் வீணடிக்கப்படுகிறது. இதனால் நாட்டிற்கு பாரிய பொருளாதார நட்டம் ஏற்படுவதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: