இலங்கையில் தொடர்ந்தும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரப்பு!!

Tuesday, December 8th, 2020

நாட்டில் நேற்றையதினம் இரண்டு கொவிட்19 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நாட்டில் இதுவரையில் பதிவான கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றையதினத்தில் மாத்திரம் 703 பேருக்கு கொவிட்19 தொற்றுதியானது.

அவர்களில் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 466 பேருக்கும், சிறைச்சாலை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடைய 237 பேருக்கும் கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலை ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 25 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம் 344 கொவிட்19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

நாட்டில் இதுவரை இந்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் 7 ஆயிரத்து 634 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: