இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் – 3 நாட்களில் 471 பேர் உயிரிழப்பு!
Sunday, August 15th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 160 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் 30 வயதிற்கு கீழ் ஒரு ஆணும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டோரில் 22 ஆண்களும் 13 பெண்களுமாக 35 பேரும் 60 வயதும் அதற்கு மேற்பட்டோரில் 64 ஆண்களும் 60 பெண்களுமாக 124 பேர் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையிழல் கடந்த 3 நாட்களில் 471 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம், மேலும் 3 ஆயிரத்து 245 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 51ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


