இலங்கையில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது – தொற்றுநோய் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை!
Wednesday, April 28th, 2021
நாட்டில் இம்முறை கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர், நாம் ஏற்கனவே அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய நபர்களுடன் முதலாவது தொடர்புகளைப் பேணியவர்கள் என அந்தப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனை ஒரு சாதாரணமாக விடயமாகக் கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் முதலாவது கொரோனா தொற்று அலையின் போது அதற்கு முகங்கொடுக்கும் வகையில் வைத்தியசாலைகளை தயார்படுத்தினோம் அதேபோல் தேவையான அளவிற்கு தற்போதும் அவற்றை ஒழுங்குபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது தம்மிடம் போதியளவு வசதிகள் உள்ளன எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தவிசாளர்களுக்கு தொலைபேசி வசதி - உள்ளுராட்சி அமைச்சால் அறிவுறுத்து!
காடுகளின் அளவை 32 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவிப்பு!
பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடனடி இடமாற்றம் - CID பணிப்பாளராக மகளிர் SSP முத்துமால நியமனம்!
|
|
|


