இலங்கையில் ஒரே வாரத்தில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று – 54 பேர் பலி!
Tuesday, May 4th, 2021
கடந்த ஒரு வார காலத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 54 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் கடந்த 27 ஆம் திகதிமுதல் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்றையதினத்தில் மாத்திரம் ஆயிரத்து 923 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களுள் 14 ஆயிரத்து 771 தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 709 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்களுள் 449 பேர் ஆண்கள் என்பதுடன் 260 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் உயிரிழந்தவர்களுள் 70 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


