இலங்கையில் ஒரே நாளில் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு !

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் நேற்றையதினத்தில் 1,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 922 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 75 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கிகாரம்!
இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரவேற்ப்பு!
ஐக்கிய தேசியக் கட்சிக்கு படுதோல்வி - பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொடுத்த மக்கள்!
|
|