இலங்கையில் ஒரு இலட்சத்துகும் அதிகமானோர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர் – தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தலைவர் சுட்டிக்காட்டு!

இலங்கையில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் ஹெரோயின் பயன்படுத்துவதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இதேநேரம் சுமார் 4 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொதுவாக, சிகரெட், மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதேவேளையில், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐஸ் ரக போதைப்பொருளைப் பயன்படுத்தும் 90 முதல் 100 பேர் மாத்திரமே 2022இல் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
ஹெரோயின் மற்றும் மரிஜுவானா பாவனையாளர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை பெறாமலேயே போதைப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துவதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷக்யா நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், சிகிச்சை மையங்களில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு மாத்திரமே சிகிச்சை வசதிகள் உள்ளன.
இந்தநிலையில், ஒவ்வொரு வருடமும் சுமார் 40 ஆயிரம் பேர், புதிதாக, சிகரெட்டுகள், மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களாக பதிவாகி வருவதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தலைவர் ஷக்யா நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|