இலங்கையில் உணவுப்பொருட்களிற்கு தட்டுப்பாடு என தெரிவிக்கப்படுவது முற்றிலும் தவறான செய்தி – அடியோடு நிராகரிக்கிறார் இராஜாங்க அமைச்சர் அஜித் கப்ரால்!

Sunday, September 5th, 2021

இலங்கையில் உணவுப்பொருட்களிற்கு தட்;டுப்பாடு காணப்படுகின்றது என வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருப்பது முற்றிலும் பொய்யான தகவல் என இராஜாங்க அமைச்சர் அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறிப்பிட்ட நபர்கள் முற்றிலும் ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

நாட்டில் நிறைய உணவுள்ளது. எனினும் மக்களிற்கு மிகவும் தேவையான பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்காக சில வர்த்தகர்கள் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் நாளாந்தம் உழைக்கும் பலர் உள்ளனர், அவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தீர்க்கவேண்டிய கடும் கடப்பாடுகள் உள்ளன.

சிலர் கடன்களை வாடகைகளை செலுத்தவேண்டிய நிலையில் உள்ளனர், பிள்ளைகள் தொடர்பான கடப்பாடுகள் உள்ளன,

நாட்டை பல வாரங்கள் முடக்கினால் இந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க சிரமப்படுவார்கள், உயிர்கள் முக்கியமானவை. தான் அது குறித்து சந்தேகம் இல்லை, ஆனால் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் மக்களிற்கு அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு உதவவேண்டும்.

உதாரணத்திற்கு பொலிஸார் சுங்கதிணைக்களம் கல்விதுறையினர் முப்படையினர் என அனைவரும் தங்கள் நாளாந்த கடமைகளை நிறைவேற்றுகின்றனர்.

தொழிற்சாலைகள் இயங்குகின்றன பத்திரிகைகள் அச்சாகின்றன, அனைவரும் சுகாதார வழிமுறைகளின் அடிப்படையில் பணியாற்ற முடியும் என்றால் வீதிகளை அமைப்பவர்களால் தங்கள் தொழிலை முன்னெடுக்க முடியுமென்றால், இடியப்பம் விற்பவர்களால் தங்கள் தொழிலை ஏன் முன்னெடுக்க முடியாது? அவர்களிற்கு வாழ்வாதாரத்திற்கு சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும்.

ஒருநாளிற்கு நாட்;டை முடக்கினால் இழப்பு ஆகக்குறைந்தது 15 பில்லியன், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 41 பில்லியன், நாட்;டை முடக்கினால் 15 பில்லியனை மீள பெறமுடியாத நிலை ஏற்படும், 20 நாட்களிற்கு நாட்டை முடக்கினால் இழப்பு 300 பில்லியன் , இது எங்களால் தாங்க முடியாத விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: