இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இருவருக்கு 7 மாதங்கள் சிறை !
Saturday, April 13th, 2024இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்கு சென்ற இருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2022ஆம் ஆண்டு திருவாடானை பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அவர்கள் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இவ்வாறான பின்னணியில் குறித்த இருவருக்கும் 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து திருவாடானை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான யோசனை விரைவில் நாடாளுமன்றத்தில் - அமைச்சர் பைசர் முஸ்தபா!
எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் - முன்னாள் பிரதமர் மகிந்த அறிவிப்பு!
லாஃப் மற்றும் லிட்ரோ எரிவாயு விலைகள் சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்...
|
|
|


