15ம் ஆண்டுகள் கடந்த நிலையில் சுனாமியால் பலியெடுக்கப்பட்ட உறவுகளுக்கு வாழும் உறவுகள் உடுத்துறையில் நினைவேந்தல்!

Thursday, December 26th, 2019

2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை நினைவு கூரும் நிகழ்வு நாடு முழுவதும் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று காலை வடமராட்சி உடுத்துறை பகுதியில் அமைந்துள நினையாலயத்தில் நினைவுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து தமது அஞ்சலிகளை இறந்த உறவுககுக்கு வாழும் உறவுகள் செலுத்தினர்.

இதன்போது வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஷ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பலதரப்பட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு நினைவு கூரியிருந்தனர்.

9.25 முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் மரணித்த உறவுகளை நினைவுகூரும் முகமாக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் கடந்துவிட்டன.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தில் சுமார் 35 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில் 5000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.

அதன்படி, சுனாமி பேரிடரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் வருடத்தின் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts: