இலங்கையில் இரண்டாயிரத்தை எட்டும் கொரோனா தொற்றாளர்கள் !
Wednesday, June 24th, 2020
இலங்கையில் புதிதாக 40 பேர் கொரோனா நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்களாகும். அவர்கள் நேற்று முன்தினம் இலங்கைக்கு கப்பல் சேவைக்காக வருகைத்தந்துள்ளனர்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக நேற்றைய தினம் அமெரிக்காவில் இருந்த வந்த 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதான உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 1991 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 1,548 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் 432 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related posts:
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு - பாதுகாப்பு அதிகாரிகளின் உயர் நிலை கூட்டம் செப்டம்பரில்!
ஒரே நாளில் யானைகள் தாக்கி யுவதி ஒருவர் உட்பட மூவர் பரிதாபச் மரணம்!
கஞ்சா பயிர்ச்செய்கையை இலங்கையில் அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியாகும் - இரா...
|
|
|


