இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது – ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு!
Saturday, April 9th, 2022
இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையிலுள்ள தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகியன இணைந்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளன.
ஒன்று கூடும் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் அமைதியாக நடைபெறும் சந்தர்ப்பத்தில், அவை எந்த ஒரு ஜனநாயக நாட்டினதும் தூண்களாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துதரப்பினரும் நிதானத்துடன் தொடர்ந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்வதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையிலுள்ள தூதரகம் தெரிவித்துள்ளது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஒரு நேர் மறையான முன்னெடுப்பாக கருதுகிறோம்.
இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் தீர்க்கமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டிய நிலைமையின் தீவிரத் தன்மையை வலியுறுத்துவதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
|
|
|


