இலங்கையில் அரச வைத்தியசாலைகளுக்கு இந்தியா நிதிஉதவி!

மேல் மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைக்கு தேவையான உபகரணம் மற்றும் துணி வகைகளை வழங்குவது தொடர்பில் இந்திய நிறுவனம்ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் ஊடாக 7.5 மில்லியன் டொலர் பெறுமதியான உபரகணங்களை வழங்குவதற்குஇந்தியாவின் சுப்ரம் ஹொஸ்பிட்டல் சொலுசன் முன்வந்துள்ளது.
மேலும் வைத்திய சிகிச்சையின் பின்னரான கழிவுகளை ஒழுங்காக அகற்றுவது தொடர்பில் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுடன் விரைவில் ஒப்பந்தம் ஒன்றுகைச்சாத்திடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்கள் தயாரிப்பு!
பொலித்தீன்களில் எண்ணெய் உற்பத்திசெய்யத் திட்டம் - கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் !
விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் நாட்டை வந்தடைந்தது!
|
|