இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கின்றேன் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான வாழ்த்துச் செய்தியில் ஜப்பானிய பிரதமர் தெரிவிப்பு!
Sunday, August 7th, 2022
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை தான் எதிர்பார்ப்பதாக ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ள அவர், அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்கள் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு விரைவான முன்னேற்றம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் கொள்கைக்கு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜப்பானிய பிரதமர் தெரிவித்துள்ளார்
இதேவேளை இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை பல வருடங்களாக முன்னெடுத்துச் சென்ற ரணில் விக்ரமசிங்க இம்முறை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமை ஊக்கமளிப்பதாக ஜப்பானிய பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதையும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறை முன்னேற்றம் அடையும் என்று கிஷிடா நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
|
|
|


