இலங்கையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகள் உற்பத்தி!

Monday, July 29th, 2019

உலகிலேயே அதிக நச்சுத் தன்மை கொண்ட காய்கறி உற்பத்தி இலங்கையில்இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள அமைச்சர் பி.ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் தொற்றா நோயினால் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் உலக உணவு வேலைத்திட்டத்திற்கு அமைவாக விவசாய திணைக்களம் அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்காக உற்பத்தி செய்யப்படும் அரிசியை பயன்படுத்தி இலவமாக பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் வருடம் ஒன்றில் காய்கறி வகைகளுக்காக 3 இலட்சம் மெட்றிக்தொன் உரவகை பயன்படுத்தப்படுகின்றதாகவும், இதே போன்று கிருமி நாசினி பொருட்கள் 5 ஆயிரம் தொன் பயன்படுத்தப்படுகின்றதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: