இலங்கையில் அதிகரிக்கிறது மற்றுமொரு உயிர்கொல்லித் தொற்று – 10 மாவட்டங்கள் அபாயமிக்க பகுதிகளாக அடையாளம்!
Sunday, July 25th, 2021
நாட்டின் 10 மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
பருவப்பெயர்ச்சி மழையுடன் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளனர்.
இவற்றில் மேல் மாகாணத்திலேயே பெருமளவானோர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
திணைக்களங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர்- யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர்!
சிறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கான தண்டனை முறைமையில் மாற்றம் - அமைச்சர் விஜயதாச ராஜபக்...
நாட்டின் அபிவிருத்திக்குத் தமிழர்களின் பங்களிப்பு மிக அவசியம் - பிரதமர் வலியுறுத்து!
|
|
|


