இலங்கையிலும் ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் – மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சர் அறிவிப்பு!
Friday, December 3rd, 2021
இலங்கையில் கொவிட் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குறித்த நபர் நைஜீரியாவுக்கு விஜயம் செய்து இலங்கை திரும்பியுள்ளதாகவும் தொற்றுக்குள்ளான நபரின் முதலாம் மற்றும் இரண்டாம் தொடர்பாளர்களுக்கு மேற்கொள்ளக்கூடிய சுகாதார நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட் டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் மக்கள் அனாவசியமாக அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்
இலங்கையில் இன்றுகாலை உறுதிப்படுத்தப்பட்ட முதலாவது ஒமிக்ரொன் தொற்றாளர் நைஜீரியாவிலிருந்து வருகைத் தந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தெளிவான கருத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கொரோனா வைரஸின் எந்தத் திரிபு கண்டறியப்பட்டாலும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது முக்கியமானதாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|
|


