இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வின் வடக்கு மாகாண மட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில்!

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வின் வடக்கு மாகாண மட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்று மத தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பகுதியில் தேசிய கொடியை தாங்கியவாறு ஆரம்பிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கொடிகளை தாங்கியவாறு மக்கள் யாழ் நகரை சுற்றி வலம் வந்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகளில் கொடிகள் தாங்கியவாறு பேரணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|