இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான அமைச்சரவை உபகுழு நியமனம்!
Tuesday, August 16th, 2022
அடுத்த வருடம் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்க தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொது நிர்வாக அமைச்சினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த, பந்துல குணவர்தன, அலி சப்ரி, விதுர விக்கிரமநாயக்க, காஞ்சன விஜேசேகர மற்றும் திரான் அலஸ் ஆகியோரும் உத்தேச உப குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம் நிறைவு!
குடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் சங்கிலியன் தோ...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பேருந்து விபத்து : 18 பேர் படுகாயம்!
|
|
|


