இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்தள்ள முக்கிய அறிவிப்பு!
Saturday, January 30th, 2021
இலங்கையில் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் துறை உட்பட அனைத்து நிறுவனங்களிலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள குறித்த அமைச்சு, பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை குறித்த அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
செழிப்பான எதிர்காலம் வளமான தாய்நாடு எனும் தொனிப்பொருளில் சுத்தந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில்அரச அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகங்களில் மின்விளக்குகளை ஒளிர விடுமாறும் அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
கண்டி கலவரம்: சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு!
யாழ்ப்பான பிராந்திய பொலிஸ் பிரிவில் 62 பேர் பொலிசாரால் கைது!
திரவ உரத்தை இன்றுமுதல் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை - கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
|
|
|


